நடுநிசியிற் பகையுணர்வு திமிருகிற வேளை.
நடுநிசியிற் கனவுலகின் கதவுடைக்கும் வேளை.
நடுநிசியிற் பிறப்பெடுக்கும் கவிகளதன் வேளை.
நடுநிசியிற் பெருமழையில் நனைந்துலவும் வேளை.
நடுநிசியிற் கைப்பிடிக்கும் கலையுறவின் வேளை.
நடுநிசியிற் பொழிபனியும் குளிர்த்துகிற வேளை.
நடுநிசியிற் பெருகிவரும் விழிமழையின் வேளை.
நடுநிசியிற் செறிமணத்தை பரவுமலர்வேளை.
நடுநிசியிற் திறந்தமனம் கிறங்குகிற வேளை.
நடுநிசியிற் காதலுறு உறவழைக்கும் வேளை.
நடுநிசியிற் தேடுகிற நினைவுகளின் வேளை.
நடுநிசியிற் பொங்கியழும் துன்பியலின் வேளை.
நடுநிசியிற் சிறையிருந்து வதைபொறுக்கும் வேளை.
நடுநிசியிற் குரலுயர்த்திக் கதறுகிற வேளை.
நடுநிசியிற் பிறருதைக்கும் வலிவெறுக்கும் வேளை.
நடுநிசியிற் கருகிவிழும் உயிரடங்கும்வேளை.
- ஆதித்தன்
15-06-2010
நடுநிசி
10:13 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 comments:
நடுநிசி நவரசங்களும் கூத்தாடும் வேளையென அழகாகக் கூறியது அருமை. வாழ்த்துகள். டென்மார்க் வேதா. இலங்காதிலகம்.
கருத்துரையிடுக